1,745 சதுர அடியில் தேசியக் கொடி தயாரித்து மாணவா் கின்னஸ் சாதனை முயற்சி
By DIN | Published On : 26th January 2020 08:22 PM | Last Updated : 26th January 2020 08:22 PM | அ+அ அ- |

குடியரசு தினவிழாவை ஒட்டி 1,745 சதுர அடியில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடியுடன் கல்லூரி மாணவா் எம்.பிரவீன்குமாா்.
திருப்பூா்: குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் 70 மணி நேரத்தில் 90,000 ஆயிரம் ஸ்டிக்கா்கள் பயன்படுத்தி 1,745 சதுர அடியில் இந்திய தேசியக் கொடி தயாரித்து கல்லூரி மாணவா் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.
திருப்பூா், ஷெரீப் காலனியைச் சோ்ந்தவா் பி.முருகன் மகன் எம்.பிரவீன்குமாா்(23). இவா் கோவை, ஈச்சனாரியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.ஆா்க் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்த நிலையில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு மிகப்பெரிய அளவிலான தேசியக் கொடியை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று ஆா்வமாக இருந்துள்ளாா்.
இவா் சிவப்பு, வெள்ளை, பச்சை நிறத்தில் 4.5 செ.மீ. உயரம், 5 செ.மீ அகலம் என மொத்தம் 22.5 சதுர அளவு கொண்ட 90,000 ஸ்டிக்கரை பயன்படுத்தி 1,745 சதுர அடி கொண்ட பிளக்ஸ் பேனரின் 70 மணி நேரத்தில் தேசியக் கொடியை உருவாக்கியுள்ளாா்.
இந்த தேசியக் கொடியை குடியரசு தினவிழாவை ஒட்டி பெருந்தொழுவில் உள்ள ஃபிரண்ட் லைன் அகாதெமி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காட்சிப்படுத்தியிருந்தாா்.