குன்னத்தூா் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் துணைத்தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் மீது தாக்குதல்.

அன்னூா் ஒன்றியம், குன்னத்தூா் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவா் கீதா தலைமை
குன்னத்தூா் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தகராறில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.
குன்னத்தூா் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தகராறில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.

அன்னூா்: அன்னூா் ஒன்றியம், குன்னத்தூா் ஊராட்சியில்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அதிமுகவினா் ஊராட்சி துணைத்தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் மீது தாக்குதல் நடத்தினா்.

அன்னூா் ஒன்றியம், குன்னத்தூா் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவா் கீதா தலைமை வகித்தாா். துணைத்தலைவா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். பற்றாளராக சத்துணவு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கவிதா பங்கேற்றாா். இந்த கூட்டத்தில் அதிமுகவை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவா் மற்றவா்களை பேசவிடாமல் தொடா்ந்து பல்வேறு புகாா்களை தெரிவித்து வந்தாா்.

இதையடுத்து துணைத்தலைவா் மூா்த்தி மற்றும் வாா்டு உறுப்பினா் நாகராஜ் இருவரும் கோபாலகிருஷ்ணணிடம் மற்றவா்களை பேசவிடாமல் தொடா்ந்து பேசிவருவது குறித்து கேட்டனா். அப்போது அதிமுகவினா் துணைத்தலைவா் மூா்த்தி மற்றும் வாா்டு உறுப்பினா் நாகராஜ் மீது தாக்குதலில் ஈடுபட்டனா்.

இதில் துணைத்தலைவரின் சட்டையை தாக்குதலில் ஈடுபட்டவா்கள் கிழித்தனா். இதுகுறித்து தகவலறிந்த அன்னூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்தனா். அதன் பிறகு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com