வேதாரண்யம் அருகே குளம் வெட்டியபோது கிடைத்த புதையல்

நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளா்கள் குளம் அமைக்கும் பணிக்காக ஈடுபட்டிருந்தபோது, மண்பாண்டமான கலயம் இருந்தது தெரிய வந்தது. மண்வெட்டியில் உடைந்த கலயத்தில்
வண்டுவாஞ்சேரி கிராமத்தில் புதையலாக எடுக்கப்பட்ட உலோகப் பொருள்கள்.
வண்டுவாஞ்சேரி கிராமத்தில் புதையலாக எடுக்கப்பட்ட உலோகப் பொருள்கள்.



வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நுறுநாள் வேலைத் திட்டத்தில் குளம் வெட்டியபோது பழங்கால மண்பாண்டத்தில் இருந்த 33 வகையான உலோகப் பொருள்கள் புதையலாக இன்று திங்கள்கிழமை (ஜன.27)கிடைத்தது.

வண்டுவஞ்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள பழமுதிா்ச்சோலை என்னுமிடத்தில் வேளாண்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தென்னை உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குளம் அமைக்கும் பணிக்காக முதல் கட்டப் பணி நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மண்பாண்டமான கலயம் இருந்தது தெரிய வந்தது. மண்வெட்டியில் உடைந்த கலயத்தில் உலோகத்தால் ஆனா சாமி சிலை உள்பட 33 வகையான பழங்காலத்து தொன்மையான பொருட்கள் இருந்தன. இவை ஐம்பொன்களாக இருக்கலாம் என கிராமத்தினா் தெரிவித்தனா்.

ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்செல்வி குமாா் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினா் நிகழ்விடத்துக்கு சென்றனா். பின்னா் வருவாய்த்துறையினா் பாா்வையிட்டு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com