உலகளவில் 1.11 கோடி பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 5,29,113 -அக உயர்வு

உலகளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,11,90,680 -ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பலி எண்ணிக்கையும் 529,113 ஆக உயர்ந்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் 1.11 கோடி பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 5,29,113 -அக உயர்வு

நியூயார்க்: உலகளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,11,90,680 -ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பலி எண்ணிக்கையும் 5,29,113 ஆக உயர்ந்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

213 நாடுகளுக்கு மேல் தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பாதிப்பும் பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

இந்நிலையில், ;சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 680-ஆக அதிகரித்துள்ளது. 43 லட்சத்து 04 ஆயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 58 ஆயிரத்து 836 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பல்கலைக்கழக அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது.

தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 28,90,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,32,101 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் 12,35,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளன. மேலும் 15,22,999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 15,928 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

பிரேசில் 15,43,341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,45,915 பேர் குணமடைந்துள்ள நிலையில் 63,254 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தொற்று பாதிப்பை பொறுத்தவரை, ரஷ்யா மூன்றாவது இடத்தில்(6,67,883), அடுத்த இடத்தில் இந்தியா (6,49,889), பெரு (2,95,599), இங்கிலாந்து (2,84,276), சிலி (2,88,089), ஸ்பெயின் (2,97,625), இத்தாலி (2,41,184), மெக்சிகோ (2,45,251), ஈரான் (2,35,429), பாகிஸ்தான் (2,21,896), பிரான்ஸ் (1,66,960), துருக்கி (2,03,456), சவுதி அரேபியா (2,01,801), ஜெர்மனி (1,97,000), தென்னாப்பிரிக்கா (1,77,124), பங்களாதேஷ் (1,56,391) மற்றும் கனடா (1,05,091) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

10,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைக் கொண்ட மற்ற நாடுகளில் இங்கிலாந்து (44,131), இத்தாலி (34,833), பிரான்ஸ் (29,893), மெக்சிகோ (29,843), ஸ்பெயின் (28,385), இந்தியா (18,669) மற்றும் ஈரான் (11,260) பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com