ஆந்திர மாநிலத்தில் கனமழை: பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஆந்திராவிலிருந்து இருந்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக செல்லும் பொன்னை ஆற்றில் இரு கரைகளும் தொட்டவாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பொன்னை ஆற்றில் இரு கரைகளும் தொட்டவாறு வெள்ளப்பெருக்கு
பொன்னை ஆற்றில் இரு கரைகளும் தொட்டவாறு வெள்ளப்பெருக்கு


ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி படிந்து வருவதால், ஆந்திராவிலிருந்து இருந்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக செல்லும் பொன்னை ஆற்றில் இரு கரைகளும் தொட்டவாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் அதிகரிக்கும், விவசாயம் பெருகும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொன்னை ஆற்றில் இரு கரைகளும் தொட்டவாறு வெள்ளப்பெருக்கு

மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளேரி பகுதியில் தடுப்பணை கட்டுவதாக தமிழக முதல்வர் ராணிப்பேட்டை மாவட்ட துவக்க விழாவில் தெரிவித்திருந்தார். அதற்கான எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

தடுப்பனை கட்டாததால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் வெள்ளநீர் வீணாக செல்வதாக ஒரு தரப்பு விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com