குளம் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டதை கண்டித்து முற்றுகை போராட்டம்

திருவாரூர் அருகே குளம் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தியதாக ஊராட்சிமன்றத் தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளம் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டதை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
குளம் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டதை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருவாரூர்: திருவாரூர் அருகே குளம் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தியதாக ஊராட்சிமன்றத் தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 4 வது வார்டில் உள்ள தாமரைக்குளத்தை தூர்வாரும் நடைபெற்று வந்த நிலையில், அந்தப் பணியை அடியக்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி தடுத்து நிறுத்தியதாகக்கூறி அதைக் கண்டித்து அந்த பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது முக்கிய நீர் ஆதாரமாக பயன்படுத்தி வரும் குளத்தை உடனடியாக தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com