மயிலாடுதுறை புதிய மாவட்டம்: சிறப்பு அதிகாரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு 

மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாத் ஐபிஎஸ் ஆகியோரை தமிழக அரசு அறிவித்தது. 
சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்ட லலிதா ஐ.ஏ.எஸ்
சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்ட லலிதா ஐ.ஏ.எஸ்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை கோட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை 38 ஆவது மாவட்டமாக மார்ச் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, இதற்கான  அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாத் ஐபிஎஸ் ஆகியோரை தமிழக அரசு அறிவித்தது. 

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி லலிதா ஐஏஎஸ் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இதேபோல் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஐபிஎஸ் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஸ்ரீநாத் ஐபிஎஸ்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் கூறுகையில், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்பதில் பெருமை அடைகிறேன்.பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எந்த பிரச்னைகள் குறித்தும் தன்னை நேரில் சந்திக்கலாம் அல்லது தனது செல்போனில் தொடர்பு கொள்ளலாம். கரோனா காலத்தில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடித்தால் கரோனா தொற்றிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். 

முன்னதாக பொறுப்பேற்றுக்கொண்ட சிறப்பு அதிகாரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com