மேட்டூர் காவிரி வெறிச்சோடியது!

ஆடி முதல் நாளில்  மக்கள் கூட்டம் இல்லாமல் மேட்டூர் காவிரியில் மேட்டூர் காவிரி வெறிச்சோடி காணப்பட்டது. 
மேட்டூர் காவிரியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீராடும் புதுமணத் தம்பதியர்.
மேட்டூர் காவிரியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீராடும் புதுமணத் தம்பதியர்.


ஆடி முதல் நாளில்  மக்கள் கூட்டம் இல்லாமல் மேட்டூர் காவிரியில் மேட்டூர் காவிரி வெறிச்சோடி காணப்பட்டது. 

ஆண்டுதோறும் தலையாடி எனக்கூறப்படும் ஆடி முதல் நாளில் மேட்டூர் காவிரியில் புதுமணத் தம்பதியர் மற்றும் பொதுமக்கள் புனித நீராடி செல்வார்கள். 

பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாச வாழ்க்கை முடித்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக புறப்பட்டனர். அப்போது தங்களை எவரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக தங்களது ஆயுதங்களை விராட தேச எல்லையில் உள்ள மயானத்தில் வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்தனர். ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை முடிந்த பிறகு தங்களின் ஆயுதங்களை எடுத்து தீயில் வாட்டி புதுப்பிப்பதாக கூறுவது ஐதீகம். 

அணைக்கட்டு முனியப்பன் கோவில்

இதை நினைவூட்டும் வகையில் புதுமணத்தம்பதிகள் காவிரியில் நீராடி மாமியார் வீடுகளின் தேங்காய் சுட்டு மகிழ்வார்கள். இந்த நாளில் மருமகனுக்கு மாமியார் வீட்டில் விருந்து வைத்து சீர் செய்வதும் வழக்கம். 

மேட்டூர் காவிரியில் நீராட மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான புதுமண தம்பதிகள் வந்து செல்வார்கள். ஆனால் நடப்பு ஆண்டில் கரோனா தொற்று காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் புனித நீராட எவரும் வரவில்லை. ஓரிருவர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக நீராடுகின்றனர். அணைக்கட்டு முனியப்பன் கோவிலிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com