பாடியநல்லூர் ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் ஆடிப்பூர விழா

பாடியநல்லூர் ஸ்ரீ  காயத்ரி  ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாக சதுர்த்தி  திருவிழா நடைபெற்றது.  
பாடியநல்லூர் ஸ்ரீ காயத்ரி ஞானேந்திர்ர் சித்தர்கள் பீடத்தில் ஆடிப்பூர விழா
பாடியநல்லூர் ஸ்ரீ காயத்ரி ஞானேந்திர்ர் சித்தர்கள் பீடத்தில் ஆடிப்பூர விழா

பாடியநல்லூர் ஸ்ரீ  காயத்ரி  ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாக சதுர்த்தி  திருவிழா நடைபெற்றது.         

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர்  ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாகசதுர்த்தி முன்னிட்டு சித்தர் அடியான் ஜெ.பூபாலன் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காயத்ரி அம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற  பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மூலவர் காயத்ரி அம்மன் மற்றும் உற்சவர் அம்மனுக்கும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வந்திருந்த பக்தர்கள் அனைவரும் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கலந்துகொண்ட  திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும்  திருமணமாகி குழந்தை பிறக்காமல் இருக்கும் பெண்களுக்கு குழந்தை பிறக்க வேண்டியும் மொத்தம் 21 பெண்களுக்கு சந்தனம், குங்குமம் நலங்கு வைத்தனர். 

கோவில் நிர்வாகம் சார்பாக அம்மன் அருள் கிடைக்க வேண்டி வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஒன்பது  வகையான அறுசுவை உணவுகளை பிரசாதமாக வழங்கினர்.

மேலும், வந்திருந்த பக்தர்கள் அனைவரும்  மஞ்சள், குங்குமம், விபூதி, வளையல் போன்ற பொருட்களை  பிரசாதமாக பெற்றுச் சென்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com