கலாமின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்
கலாமின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்

கலாமின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள்: குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

ராமேசுவரம் அடுத்துள்ள போய்கருப்பு கிராமத்தில்  குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் 5ஆம் ஆண்டு நாளையொட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ராமேசுவரம் அடுத்துள்ள பேய்கருப்பு கிராமத்தில்  குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் 5ஆம் ஆண்டு நாளையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சமாதியில் அவரது குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இஸ்லாமிய முறைப்படி துவா செய்தனர். 

இராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மசூதி தெருவை சேர்ந்த ஆவுல் பக்கீர் ஜெய்னுலாவுதீன் ஆஷியம்மா இவர்களுக்கு 5 வது மகனாக பிறந்த  ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தனது சிறு வயதிலே கண்டுபிடிப்பு போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இதனால் இவரது கல்வி பருவம் ராமேஸ்வரம் அரசு பள்ளியில் தொடங்கியது. பள்ளியில் கலாம் பெயருக்கு ஏற்ற வகையில் தனித்திறமையை வெளிபடுத்தினார். இதனால் ஆசிரியர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றதுடன் இவரது அறிவுக்கனவை நினைவாக்க ஆசிரியர்கள் சக நண்பர்கள் துணையாக இருந்துள்ளனர்.

இதன் பின் ராமநாதபுரம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படிப்பை முடித்த கலாமிற்கு இந்திய ஆராய்ச்சி நிறுவனம் வரவேற்றது. இதில் தனது பணியை தொடங்கிய கலாம் அதிலும் சிறப்பாக பணியாற்றி நாட்டிற்கு உலகளவில் நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தார்.

கலாமிற்கு பல நாடுகளில் வரவேற்று இருந்தாலும் அவரது எண்ணம் முழுவதிலும் இந்திய மக்களின் வளர்ச்சியை பற்றிய நினைவாகவே இருந்தது. இதனால் அவர் பணியாற்றி இடங்களில் வியக்கத்தக்க பணிகளை மேற்கொண்டு பணியாற்றினார்.  

இதன் காரணமாக இந்தியாவில் உயரிய பதவியாக இருக்கும் குடியரசு தலைவர் பதவியை காலமுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டதுடன் செல்லும் இடங்களில் பள்ளி, மாணவ, மாணவிகளிடம் உரையாடுவதை வழக்கமாக கொண்டு வந்தார்.

இந்தியாவை வளர்ந்த இந்தியாவாக மாற்ற 2020 என்ற திட்டத்தை உருவாக்கி அதற்காக பாடுபட்டார்.

தன் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் வாழ்நாள் முழுவதிலும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பாடுபட்டதால் மக்களின் குடியரசு தலைவராக பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 27.07.2015 மேகாலாயா மாநிலம் சிலாங் பகுதியில் மாணவர்களிடம் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனிற்றி காலமானர்.

இந்த செய்தி இந்திய மக்கள் மட்டுமின்றி உலகளவில் வேதனை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதையடுத்து கலாம் உடல் ராமேஸ்வரம் அடுத்துள்ள பேக்கரும்பு கிராமத்தில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை மத்திய பாதுகாப்புத்துறை பரமரிப்பில் இருந்து வருகின்றது.  

இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு ஆராயச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட பேய்கருப்பு கிராமத்தில் தேசிய நினைவிடம் அமைக்கப்பட்டது.

இதுவரையில்  95 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை கலாம் தேசிய நினைவிடத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று 5 ஆம் ஆண்டு நினைவு தினம் (திங்கட்கிழமை) அனுசரிக்கப்பட்டது. கலாம் தேசிய நினைவிடத்தில் முழவதிலும் மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது. உடல் அடக்க செய்யப்ட்ட மைய மண்டபம் வண்ண மலர்கள் மூலம் அலங்கரிப்பட்டிருந்தது.

மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகராவ் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் குடும்பத்தினர் ஏ.பி.ஜே.எம்.ஜெய்னுலாவுதீன், நசிமாமரைக்காயர், சேக்தாவுது, சேக்சலீம் மற்றும் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, கலாம் தேசிய நினைவிட பொருப்பாளர் அன்பழகன் உள்ளிட்டவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் ஜமாத்தார்கள் முன்னிலையில் துவா செய்து இஸ்லாமிய முறைப்படி இளிப்பு வழங்கினர். கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com