முகப்பு தற்போதைய செய்திகள்
ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் 4 கிலோ தங்கம்; 601 கிலோ வெள்ளி உள்ளது: தமிழக அரசு
By DIN | Published On : 29th July 2020 10:46 AM | Last Updated : 29th July 2020 10:46 AM | அ+அ அ- |

சென்னை: மறைந்த முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தில் 4 கிலோ 372 கிராம் தங்கம்; 601 கிலோ 424 கிராம் வெள்ளி உள்ளது என்று தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மறைந்த முதல்வா் ஜெயலலிதா கடந்த 2016 -ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து, அதற்கான சட்ட ரீதியான பணிகள் நடைபெற்றன. பூர்வாங்க பணிகளும் முடிவடைந்து ஜெயலலிதா வாழ்ந்த, 'வேதா நிலையம்' அரசுடைமை ஆக்கப்பட்டது. அதற்கான தொகை, ரூ.68 கோடி ரூபாயை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தி மீட்டது.
இந்நிலையில், வேதா நிலையம் அரசுடைமை ஆக்கப்பட்டதை தொடர்ந்து வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பட்டியலை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இதில், மொத்தம் 32,721 பொருள்கள் வீட்டில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி,
* 4 கிலோ 372 கிராம் தங்கம்; 601 கிலோ 424 கிராம் வெள்ளி
* 162 கிலோ வெள்ளி பொருள்கள்; 6514 சமையல் பெருட்கள்
* 8,376 புத்தகங்கள்; 394 நினைவு பரிசுகள்
* 11 தொலைக்காட்சி பெட்டிகள்; 10 பிரிட்ஜ்; 38 ஏசி; பர்னிச்சர் பொருள்கள் 556
* 15 பூஜை பொருட்கள்; 1055 காட்சி பெட்டி பொருட்கள்
* துணி, துண்டுகள், தலையானி, போர்வைகள், டவல், காலணிகள் என 10,438; ஸ்டேசனரி பொருட்கள் - 253
* தொலைபேசி/ கைபேசி - 29
* சூட்கேஸ்கள் - 65
* சமையல் மின்சார பொருட்கள் - 221 ; ஜெராக்ஸ் மிஷின் - 1, லேசர் பிரிண்டர் 1 என - 251 மின்சார பொருட்கள்
* 6 கடிகாரம் என மொத்தம் 32,721 பொருள்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.