மானாமதுரை அருகே கால்வாய் தூர்வாரும் பணியை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வியாழக்கிழமை நடந்த கால்வாய் தூர்வாரும் பணியை காவலர்கள் தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தின் பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.
மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தின் பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வியாழக்கிழமை நடந்த கால்வாய் தூர்வாரும் பணியை காவலர்கள் தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மானாமதுரை ஒன்றியம் கீழமேல்குடி கிராமத்தின் கண்மாய்க்கு வைகையாற்றிலிருந்து தண்ணீர் வரும் கால்வாயை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக இக் கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், கீழமேல்குடி கிராம மக்கள் சேர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் தர்மாராமு மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் வைகையாற்றிலிருந்து கீழமேல்குடி கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். அப்போது பிரச்னைக்குரிய பகுதியிலும் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு தூர்வாரப்பட்டது. அப்போது அங்கு வந்த மானாமதுரை காவல் சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணன் உள்ளிட்ட காவலர்கள் கால்வாய் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர். பிரச்னைக்குரிய கால்வாய் பகுதியில் தூர்வாரக்கூடாது என கிராம மக்களிடம் காவலர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து கிராம மக்களுக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் வட்டாட்சியர் வந்தபின் பேசி தூர்வாரும் பணியை மேற்கொள்ளலாம் என காவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கீழமேல்குடி கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com