அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 19,01,783; பலி 1,09,142

அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 19,01,783 ஆக அதிகரித்துள்ளது.  
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 19,01,783; பலி 1,09,142

  
வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 19,01,783 ஆக அதிகரித்துள்ளது.  

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பாதிப்பும் பலியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொணே்டே இருக்கிறது. இந்த தொற்று உலக அளவில் இதுவரை 65,68,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, நோய்த்தொற்று பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 3,87,957-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 19,01,783 ஆக அதிகரித்துள்ளது.  

இதுதவிர, நோய்த்தொற்று பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 1,09,142 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 6,88,670 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அமெரிக்காவில் அதிகயளவில் நியூயார்க்கில் 3,82,837பேரும், நியூ ஜெர்சியில் 1,63,774 பேரும், இல்லினாய்ஸ் 1,23,830 பேரும், கலிபோர்னியாவில் 1,20,260 பேரும், மாசசூசெட்ஸ் 101,592 பேரும், பென்சில்வேனியாவில் 77,878 பேரும், 
டெக்சாசில் 69,437 பேரும், புளோரிடாவில் 58,764 பேரும், மிச்சிகனில் 58,035 பேரும், மேரிலாந்தில் 54,982 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com