திருமலையில் தேவஸ்தான ஊழியர்களுடன் தரிசன சோதனை ஓட்டம்

திருமலையில் இன்று காலை 50 தேவஸ்தான ஊழியர்களுடன் தேவஸ்தானம் ஏழுமலையான் தரிசன சோதனை ஓட்டத்தை தொடங்கியது.
திருப்பதி கோவில்
திருப்பதி கோவில்


திருப்பதி: திருமலையில் இன்று காலை 50 தேவஸ்தான ஊழியர்களுடன் தேவஸ்தானம் ஏழுமலையான் தரிசன சோதனை ஓட்டத்தை தொடங்கியது.

திருமலையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏழுமலையான் தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. தற்போது ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் கோவில்களை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், மாநில அரசின் உத்தரவுடன் ஏழுமலையான் தரிசனத்தை தொடங்கும் பணிகளில் தேவஸ்தானம் ஈடுபட்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை காலை தேவஸ்தான ஊழியர்கள் 50 பேருடன் தரிசன சோதனை ஓட்டத்தை தேவஸ்தானம் நடத்தியது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேரடியாக பார்வையிட்டார். 

ஜூன் 8 ஆம் தேதி முதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க உள்ள நிலையில் தேவஸ்தானம் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது. இதன் நிறைகுறைகளை பரிசீலித்து முழுமையான நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொள்ள உள்ளது. 

தேவஸ்தான ஊழியர்கள் திருமலைக்கு பயணிக்க ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகமும் நாளை முதல் 50 பேருந்துகளை திருமலைக்கு இயக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com