திருமலையில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு குத்தகை தொகை நிர்ணயிப்பு

திருமலையில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு குத்தகை தொகை நிர்ணயித்து ஆந்திரம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
திருப்பதி
திருப்பதி



திருப்பதி: திருமலையில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு குத்தகை தொகை நிர்ணயித்து ஆந்திரம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருமலையில் நாட்டில் உள்ள முக்கிய மடங்களுக்கு நிலங்களை ஒதுக்கி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்துள்ளது. இந்த நிலங்களில் மடங்கள் மற்றும் பீடங்கள் சார்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டங்களில் மடங்களை சேர்ந்தவர்கள் வந்து தங்கி வருகின்றனர். அதேபோல் விசாகபட்டிணத்தில் உள்ள சாரதா பீடத்திற்கும், மெளனசாமி மடத்திற்கும் தேவஸ்தானம் திருமலையில் நிலங்களை ஒதுக்கி வழங்கியுள்ளது. அதில் மடங்களின் சார்பில் கட்டங்கள் கட்டப்பட்டுள்ளது. 

ஆனால் தேவஸ்தானம் வழங்கிய நில அளவை காட்டிலும் மடங்கள் கூடுதலாக நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. சாரதா பீடம் 4,817 சதுரடியும், மெளனசாமி மடம் 1,870 சதுரடியும் கூடுதலாக நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளதை தேவஸ்தானம் கண்டறிந்துள்ளது. 

இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த அறங்காவலர் குழுவில் விவாதிக்கப்பட்டு கூடுதலாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு குத்தகை தொகையை நிர்ணயித்து தீர்மாணம்(எண் 249) ஒன்று நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி, மெளனசாமி மடம் ஆக்கிரமித்த நிலத்திற்கு ஒரு சதுர அடி ரூ374 ஆகவும், சாரதா பீடம் ஆக்கிரமித்த நிலத்திற்கு ஒரு சதுரஅடி ரூ.964 ஆகவும் குத்தகை தொகை நிர்ணயிக்கப்பட்டது. 

இதுகுறித்து ஆந்திரம் அரசுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கடந்த ஜன.21 ஆம் தேதி கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தற்போது பரிசீலித்த ஆந்திரம் அரசு தேவஸ்தான அறங்காவலர் குழு மேற்கொண்ட தீர்மாணத்திற்கு ஒப்புதல் அளித்து வியாழக்கிழமை உத்திரவு பிறப்பித்தது. அதன்படி மேற்கண்ட மடங்கள் தாங்கள் கூடுதலாக ஆக்கிரமித்த நிலத்திற்கு குத்தகை தொகையை தேவஸ்தானத்திற்கு செலுத்த வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com