மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: மின்னுற்பத்தி அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: மின்னுற்பத்தி அதிகரிப்பு


மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நீர் மின் நிலையங்களில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.  அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 7 கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த 4 தினங்களுக்கு முன்பு இந்த நீர்மின் நிலையங்களில் 191 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது கதவணை மின் நிலையங்களில் தண்ணீரின் நீர் மட்டத்தை உயர்த்தியதால் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 13 ஆம் தேதி உற்பத்தி செய்யப்பட்ட 191 மெகாவாட் மின் உற்பத்தியை விட தற்பொழுது 31 மெகாவாட் அதிகரித்து 222 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கதவணை மின் நிலையங்களில் முழு அளவில் தண்ணீர் தேக்காததால் அதிக அளவில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை இருந்து வந்த நிலையில் தற்போது முழு அளவில் தண்ணீர் தேக்கப்பட்டு மின் உற்பத்தி செய்வதால் கடந்த 4 தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மின்உற்பத்தி விட தற்போது கூடுதல் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com