ராஜபாளையம் அருகே கொலைக்கு பழிக்குப்பழியாக இருவருக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இருவருக்கு அரிவாள் வெட்டு, காவலர்கள் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே கொலைக்கு பழிக்குப்பழியாக இருவருக்கு அரிவாள் வெட்டு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இருவருக்கு அரிவாள் வெட்டு, காவலர்கள் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தை சேர்ந்த தையல் தொழிலாளி சக்திவேல்(43) மாற்றுத் திறனாளியான இவர், வியாழக்கிழமை காலை படித்து விட்டு வீட்டில் இருக்கும் தனது சகோதரர் தர்மராஜை(28) உடன் அழைத்துக் கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் வழக்கம் போல வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வீரையா, முனியராஜ், பாலமுருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய நான்கு பேரும் இருவரும் வந்த வாகனத்தை வழி மறித்து இருவரையும் அரிவாள் மற்றும் மண் வெட்டி கொண்டு சரமாரியாக வெட்டி உள்ளனர். இந்த தாக்குதலில் நிலை குலைந்த இருவரும் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி செய்த பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான இருவரின் உறவினர்களும் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

விசாரணையில், தேசிகாபுரத்தை சேர்ந்த விவசாயி தங்கவேல் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி இரவு வீட்டுக்கு செல்லும் வழியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். தேர்தல் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக புதிய தமிழகம் கட்சி பிரமுகர் ராஜாலிங்கம் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளிகள் 11 நபர்களில் சக்திவேலும் ஒருவர். எனவே தங்கவேல் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த தாக்குதலாக இருக்கலாம் எனவும், சக்திவேலை தாக்கிய போது, சகோதரர் இடை மறித்ததால் தர்மராஜையும் கொலை கும்பல் தாக்கியிருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com