முன்னெச்சரிக்கையுடன் மூலனூரில் மீண்டும் பருத்தி விற்பனை 

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் திருப்பூர் மாவட்டம் மூலனூரில் பருத்தி விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டது.
முன்னெச்சரிக்கையுடன் மூலனூரில் மீண்டும் பருத்தி விற்பனை 


வெள்ளக்கோவில்: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் திருப்பூர் மாவட்டம் மூலனூரில் பருத்தி விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் தமிழகத்திலேயே பருத்தி அதிகளவு விற்பனை நடைபெறும் இடமாகும். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக விற்பனை நிறுத்தப்பட்டது. இனி வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமை விற்பனை, பணப் பட்டுவாடா தொடர்ந்து நடைபெற உள்ளது. 

இந்த வார மறைமுக ஏலத்துக்கு 616 குவிண்டால் வரத்து இருந்தது. திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் 179 பேர் தங்களுடைய பருத்திகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 11 வணிகர்கள் வாங்குவதற்காக வந்திருந்தனர். குவிண்டால் ரூ. 3,400 - ரூ.4,959 வரை விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ.25 லட்சம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டது. 

விற்பனைக் கூடத்தில் அனைவருக்கும் சுகாதாரத் துறை மூலம் கரோனா உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டதாக திருப்பூர் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் தர்மராஜ், மகுடேஸ்வரன் மேற்பார்வையாளர்கள் சீரங்கன் , அருள்குமார் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com