வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி மாணவர்கள் 120 பேருக்கு தலா 5 கிலோ அரிசி

பொது மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், தங்களது சம்பளம் மூலம் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினர்.
அரிசி வழங்குகிறார் பெ.ஆ.கழகத் தலைவர் ராஜேந்திரன்.
அரிசி வழங்குகிறார் பெ.ஆ.கழகத் தலைவர் ராஜேந்திரன்.


வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 120 குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களின் பெற்றோர் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். கரோனா ஊரடங்கு காரணமாக பலர் வேலையின்றி குடும்பம் நடத்தச் சிரமப்பட்டு வந்தனர்.

இவர்களுக்கு உதவ ஆசிரியர்கள் முடிவு செய்தனர். பொது மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், தங்களது சம்பளம் மூலம் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் பாலசிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் கருணாகரன், சக்திகுமார், முருகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com