செய்யாறு: தந்தை மகன், சகோதரர்கள் உள்பட 39 பேருக்கு கரோனா தொற்று 

செய்யாறு சுகாதார மாவட்டத்தி்ல் தந்தை மகன், சகோதரர்கள் உள்பட39  பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

செய்யாறு சுகாதார மாவட்டத்தி்ல் தந்தை மகன், சகோதரர்கள் உள்பட39  பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களில் இருந்து தங்கியவர்கள், கரோனா தொற்று உடையவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்ட 794 பேருக்கு ஜூன்.21 -ல் சளி பரிசோதனை  செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கரோனா வைரஸ் தடுப்பு கண்காணிப்பு முகாமில் இருந்த 97 பேரில் 5  பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

அதேபோல் செய்யாறு திருவோத்தூரைச் சேரந்த வியாபாரிகளான சகோதரர்களுக்கும், கிடங்குத் தெருவில் ஏற்கெனவே கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கும் அவரது சகோதரிக்கும், புளுந்தைக் கிராமத்தில் தந்தை மகனுக்கும், முனுகப்பட்டு கிராமத்தில் 36 வயது இளைஞர், வெள்ளைக் கிராமத்தில் 30 வயது பெண்மணி ஆகியோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

வந்தவாசி வட்டத்தில் 19 பேர், ஆரணி வட்டத்தில் 12 பேர் உள்பட 39  பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை ஆகிய அரசு மருத்துவமனைகளி்லும்,  செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையத்திலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் முழு வீச்சில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com