கம்பம் பகுதிகளில் முதல் போக சாகுபடி நடக்குமா?- கிணற்று பாசனத்தில் விவசாயிகள்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடி நடக்குமா என்பதற்கிடையில், சில விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்துள்ளனர். 
தேனி மாவட்டம் ஆங்கூர்பாளையம் கூடலூர் செல்லும் சாலையில் கிணறு பாசனம் மூலம்நடவு செய்துள்ள நெல் பயிர்.
தேனி மாவட்டம் ஆங்கூர்பாளையம் கூடலூர் செல்லும் சாலையில் கிணறு பாசனம் மூலம்நடவு செய்துள்ள நெல் பயிர்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடி நடக்குமா என்பதற்கிடையில், சில விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்துள்ளனர். 

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, முதல் போக சாகுபடி பணிகள் தொடங்கும்.

கடந்த சில ஆண்டுகளாக பெரியாறு அணையில் தண்ணீர் இல்லாதலால்,  முதல் போக சாகுபடி தாமதமாக நடைபெற்றது. நன்செய் விவசாயிகள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர்.

இதற்கிடையில் நடப்பாண்டிலும் ஜூன் மாதம் முடியப்போகும் நிலையிலும், அணைப்பகுதியில் மழை இல்லாததால், தண்ணீர் திறப்பு இல்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஆங்கூர்பாளையம் பகுதிகளில் உள்ள சில விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் தற்போது நெல் நடவு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com