எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு அரசைக் குறை கூறி வருகிறார்: முதல்வர்

எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு அரசைக் குறை கூறி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு அரசைக் குறை கூறி வருகிறார்: முதல்வர்

எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு அரசைக் குறை கூறி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா பணிகளை ஆய்வு செய்து பிறகு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே தமிழகத்தில் அதிக அளவில் கருணை பரிசோதனை செய்து வருகிறது. புதிய நோயாக இருப்பதால் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகமே அதிர்ந்து போயிருக்கிறது. இந்தச் சூழலில் மத்திய சுகாதாரத்துறை, உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனையின் பேரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். 

இதனால் உயிரிழப்பு பெருமளவில் குறைந்துள்ளது. அரசை பொருத்தவரைக்கும் மக்களைக் காக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் பற்றி குறை சொல்லி வருகிறார். நான் உறுப்பினர் துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் என பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு அரசையும், முதல்வரையும் குறை கூறி வருகிறார். நோயை எப்படி தடுக்க முடியும் என்பது பற்றி எல்லாம் ஆலோசனை அவர் தருவதில்லை.

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் வந்து பணிபுரிய ஆவலாக இருப்பதாக தொழில்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தமிழக அரசு வைரஸ் நோய்த் தடுப்பு பணி முழு வீச்சில் செய்யப்படுகிறது. பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை பொருத்து முடிவு செய்யப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com