ஆட்சியர் அலுவலகத்தில் நடைபயிற்சிக்குத் தடை

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் நடை பயிற்சி மேற்கொள்ள திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்படுகிறது.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபயிற்சிக்குத் தடை

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் நடை பயிற்சி மேற்கொள்ள திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 24 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை, மாலை வேளைகளில் அதிக அளவிலான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருவதால் சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வர வேண்டும். 

அதே வேளையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உடற்பயிற்சிக் கூடங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படும் உடற்பயிற்சிக் கூடங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com