குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக நாகர்கோவிலில் பாஜக சார்பில் பேரணி பொதுக்கூட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
By DIN | Published On : 01st March 2020 07:53 PM | Last Updated : 01st March 2020 07:53 PM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ்
நாகர்கோவில்: குமரி மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
பேரணியில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்கள்
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். பார்வதிபுரத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இப்பேரணி கே.பி.ரோடு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது.
கூட்டத்தில் பேசுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், தமிழக பாஜக துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி. வேலூர் இப்ராகிம் உள்ளிட்டோர் குடியுரிமைச் சட்டம் குறித்து விளக்கினார்கள். இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.