மார்ச்.2: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் திங்கள்கிழமை (மார்ச்.2) பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 23 காசுகளும், டீசல் லிட்டருக்கு 21 காசுகளும்
மார்ச்.2: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னை: சென்னையில் திங்கள்கிழமை (மார்ச்.2) பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 23 காசுகளும், டீசல் லிட்டருக்கு 21 காசுகளும் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து திங்கள்கிழமை விற்பனையாகிறது.

இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் ஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டெப்ரோல் ரூ.74.28 ஆகவும், டீசல், லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.67.65 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com