எதிர்க்கட்சி தலைவர்கள் தெருவில் கலவரத்தை உருவாக்கிவிட்டு நாடாளுமன்றத்தில் போராடுகிறார்கள்: மத்திய அமைச்சர் நக்வி

எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் தெருவில் கலவரத்தை உருவாக்கிவிட்டு நாடாளுமன்றத்திற்கு வந்து போராடுகிறார்கள் என்று மத்திய சிறுபான்மை 
எதிர்க்கட்சி தலைவர்கள் தெருவில் கலவரத்தை உருவாக்கிவிட்டு நாடாளுமன்றத்தில் போராடுகிறார்கள்: மத்திய அமைச்சர் நக்வி


புதுதில்லி: எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் தெருவில் கலவரத்தை உருவாக்கிவிட்டு நாடாளுமன்றத்திற்கு வந்து போராடுகிறார்கள் என்று மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டினர்.

நாடாளுமன்றத்தில் வடகிழக்கு தில்லி வன்முறை தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை இரு அவைகளின் தலைவர்களும் நிராகரித்ததை அடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள்  திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தநிலையில் மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  "எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் தெருவில் ஒரு கலவரத்தை உருவாக்கிவிட்டு நாடாளுமன்றத்தில் போராடுகிறார்கள். வன்முறையின் பின்னணியில் உள்ள அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அமைதியும் நல்லிணக்கமும் எங்கள் முன்னுரிமை. "

"குடியுரிமைச் சட்டங்களைத் திருத்திய முதல் நபர் நாங்கள் அல்ல. முந்தைய அரசாங்கங்களும் இதை பல முறை திருத்தியுள்ளன. சிஏஏவுக்கு எதிராக வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று நான் எதிர்க்கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் அமைதிக்காக போராட வேண்டும், மக்களைத் தூண்டக்கூடாது" என்று நக்வி  கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com