கோப்புப்படம்
கோப்புப்படம்

ஈரானில் இருந்து 4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

ஈரானில் இருந்து  4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாட்டிலிருந்து 389 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

புதுதில்லி: ஈரானில் இருந்து  4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாட்டிலிருந்து 389 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் கரோனா வைரஸ் தாக்குதல் கடுமையாக உள்ளது. இதையடுத்து ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து முதல்கட்டமாக, கடந்த செவ்வாய் மற்றும் 58 இந்திய யாத்திரிகளும், 2-வது கட்டமாக வெள்ளிக்கிழமை 44 இந்திய யாத்திரிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். 

பின்னர் 3-வது கட்டமாக சனிக்கிழமை 230 இந்தியர்கள் ஈரானிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜெய்சல்மரில் உள்ள இந்திய ராணுவ நல மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில்,  4-வது கட்டமாக  52 இந்திய மாணவர்கள் ஒரு ஆசிரியர் உள்பட 53 இந்தியர்கள், ஈரானின்  தெஹ்ரான் மற்றும் ஷிராஸ் நகரிலிருந்து இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். அதிகாலை 3 மணிக்கு தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய மஹான் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்தனர். அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.  இதுவரை ஈரானிலிருந்து 389 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.   மேலும் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீண்டும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்து  செயல்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்றுக்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஈரானில் தற்போது வரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, ஈரான் மற்றும் ஈரானின் அதிகாரிகளின் முயற்சிகளுக்கு நன்றி  தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர் .

கரோனா வைரஸ் தொற்றுக்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மற்றும் இத்தாலியில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருவதாக ஜெய்சங்கர் கடந்த வாரம் மாநிலங்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com