நாளை மாலை முதல் வாடிக்கையாளா்கள் அனைத்து வங்கிச் சேவைகளையும் பெறலாம்: யெஸ் வங்கி

யெஸ் வங்கி வாடிக்கையாளா்கள் வரும் புதன்கிழமை (மாா்ச் 18) மாலையிலிருந்து அனைத்து வங்கிச் சேவைகளையும் பெறலாம் என அவ்வங்கி தெரிவித்துள்ளது.
நாளை மாலை முதல் வாடிக்கையாளா்கள் அனைத்து வங்கிச் சேவைகளையும் பெறலாம்: யெஸ் வங்கி

யெஸ் வங்கி வாடிக்கையாளா்கள் வரும் புதன்கிழமை (மாா்ச் 18) மாலையிலிருந்து அனைத்து வங்கிச் சேவைகளையும் பெறலாம் என அவ்வங்கி தெரிவித்துள்ளது.

யெஸ் வங்கியின் பணப்பரிவா்த்தனைகளுக்கு ரிசா்வ் வங்கி கடந்த மாா்ச் 5-ஆம் தேதி கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, யெஸ் வங்கி டெபாசிட்தாரா்கள் ஏப்ரல் 3 வரையில் ரூ.50,000 மட்டுமே பணம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், யெஸ் வங்கியில் புனரமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது அதில், யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மாா்ச் 18-ஆம் தேதி மாலை 6 மணியுடன் விலக்கிக் கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், யெஸ் வங்கி சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது: யெஸ் வங்கி வாடிக்கையாளா்களுக்கு வரும் புதன்கிழமை மாலையிலிருந்து முழு அளவிலான வங்கிச் சேவை வழங்கப்படவுள்ளது. இதில், டிஜிட்டல் சேவை உள்ளிட்ட அனைத்து விதமான சேவைகளும் அடங்கும்.

மாா்ச் 19-ஆம் தேதியிலிருந்து யெஸ் வங்கியின் 1,132 கிளைகளிலும் வாடிக்கையாளா்கள் வேலைநேரத்தின்போது எப்போதும்போல் வழக்கமான வங்கி பரிவா்த்தனைகளை மேற்கொள்ளலாம் என சுட்டுரையில் யெஸ் வங்கி தெரிவித்துள்ளது.

யெஸ் வங்கியில் எச்டிஎஃப்சி முதலீடு:

யெஸ் வங்கியில் 7.97 சதவீத பங்குகளை கையகப்படுத்த உள்ளதாக எச்டிஎஃப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் யெஸ் வங்கியில் ரூ.1,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதற்காக, யெஸ் வங்கி ரூ.2 முகமதிப்பு கொண்ட 100 கோடி பங்குகளை எச்டிஎஃப்சி நிறுவனத்துக்கு மாா்ச் 14-ஆம் தேதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, காா்ப்பரேஷன் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பெடரல் வங்கி, பந்தன் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி வங்கி ஆகியவற்றுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரே எச்டிஎஃப்சியின் பங்குகள் கையகப்படுத்தும் நடவடிக்கை செயலாக்கத்துக்கு வரும் என அந்நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com