பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை விலையில் எந்தவித மாற்றமும் இன்றி புதன்கிழமை அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை


சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை விலையில் எந்தவித மாற்றமும் இன்றி புதன்கிழமை அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்துள்ளன.

எனினும், அந்த எரிபொருள்களின் உற்பத்தி வரியை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து சிறிதளவில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “ சென்னையில் பெட்ரோல் செவ்வாய்க்கிழமை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது. 

தொடர்ந்து பத்தாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் தொடர்கின்றன  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com