மருத்துவர்கள், செவிலியர்கள் வெள்ளை நிற உடை அணிந்த கடவுள்கள்: நிர்மலா சீதாராமன் 

கரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள் வெள்ளை நிற உடை அணிந்த கடவுள்கள்: நிர்மலா சீதாராமன் 

புதுதில்லி: கரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுமக்களுக்கான பல உதவிகளை அறிவித்து வருகிறார்.

அப்போது, கரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர்.  உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர்களுக்கு 1,70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக எசமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு. விவசாயிகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்படும்.  யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com