ஈரானில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகின்றன: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

ஈரானில் கரோனா பாதிப்புக்கு புதியதாக மேலும் 2,389 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின்
ஈரானில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகின்றன: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி



டெஹரான்: ஈரானில் கரோனா பாதிப்புக்கு புதியதாக மேலும் 2,389 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,406 ஐ எட்டியுள்ளது. வைரஸ் தொற்றால் 157 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 2,234 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிப்ரவரி 19 அன்று வைரஸ் முதல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 10,457 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு ஒரு சமூக இடைவெளி செயல்படுத்துவதாக அறிவித்துள்ள ஈரான், இதற்காக நகரங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் போன்ற பொது இடங்களை மூடவும், கூட்டங்களுக்கு தடை, மற்றும் அரசு ஊழியர்களின் வேலை நேரங்களைக் குறைத்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கு 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை வழங்க ஈரான் மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

துருக்கி: துருக்கியில் வியாழக்கிழமை 16 புதிய உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், வைரஸ் தொற்றுக்கு புதியதாக 1,196 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,629 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல்: இஸ்ரேலில் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,693 ஆக உயர்ந்துள்ளது, அவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 70 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 

அத்தியாவசிய தொழிலாளர்களைக் கொண்டு செல்வதற்காக பேருந்து வழித்தடங்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அனுமதித்திருக்கும் இஸ்ரேல், வியாழக்கிழமை அனைத்து ரயில் சேவைகளையும் நிறுத்தியது. கார்களில் ஒரு பயணிகளை மட்டுமே அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் முன்னணி விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. வழக்கமான விமானங்களுக்கான தேவை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. 

மொராக்கோ: மொராக்கோவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 

ஜோர்டான்: ஜோர்டானில் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்துள்ளது.

ஈராக்: ஈராக்கில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 36 உயிரிழந்துள்ளனர். 105 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 

லெபனான்: லெபனானில் புதியதாக 35 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது, அவற்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

குவைத்: குவைத்தில் புதியதாக 13 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 208 ஆக உயர்ந்துள்ளது. 49 பேர் குணமடைந்துள்ளனர், 159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாலஸ்தீனம்:  பாலஸ்தீனத்தில் 15 புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இதில் புதிய பாதிப்புகள் அனைத்தும் ஜெருசலேமின் வடமேற்கில் உள்ள பெடோ கிராமத்திலிருந்து  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஓமான்: ஓமானில், கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை109 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com