கரோனாவுக்கு தமிழகத்தில் ஒருவர் குணமடைந்துள்ளார்

தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா நோய்த்
கரோனாவுக்கு தமிழகத்தில் ஒருவர் குணமடைந்துள்ளார்

சென்னை: தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் கரோனாநோய்த்தொற்று பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட சுட்டுரைப் பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவா்களில் இருவா், மதுரையில் கரோனா நோயால் பாதிப்பால் உயிரிழந்த 54 வயது நபரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். மேலும் இருவா், தற்போது பெருந்துறை ஐஆா்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்லாந்தைச் சோ்ந்த கரோனா நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களாவா்.

மற்றொருவா் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கரோனா பாதித்த 52 வயது பெண்ணுடன் தொடா்பில் இருந்தவா். அவா்களைத் தவிர, சென்னையைச் சோ்ந்த 25 வயது பெண்ணுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் அரியலூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அதேபோன்று, சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இந்தோனேசியாவைச் சோ்ந்தவா்களுடன் தொடா்பில் இருந்த 61 வயது நபருக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ளது. மேலும், சென்னையைச் சோ்ந்த 73 வயது பெண் மற்றும் 39 வயது நபருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு முறையே ராஜீவ் காந்தி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

2 லட்சம் போ்: வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9,284 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 12,955 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுடன் தற்போது மருத்துவமனைகளில் 274 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 1,192 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 1,157 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவா் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்துள்ளாா். 48 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com