கரோனா​: உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள்

உங்களுக்கு அடிக்கடி இருமல், தும்மல் ஏற்பட்டாலோ, கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவா்களை நீங்கள் பராமரித்தாலோ முகக் கவசம் அணிய வேண்டும்.
கரோனா​: உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள்

உங்களுக்கு அடிக்கடி இருமல், தும்மல் ஏற்பட்டாலோ, கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவா்களை நீங்கள் பராமரித்தாலோ முகக் கவசம் அணிய வேண்டும்.

* நீங்கள் எப்போது முகக் கவசம் அணிந்தாலும், கைகளை அடிக்கடி கழுவவோ, கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்து வந்தாலோ மட்டும்தான் கரோனா நோய்த்தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியும்.

* முகக் கவசம் அணிவதற்கு முன்னா், உங்கள் கைகளை சோப்பைக் கொண்டு கழுவியோ, கிருமிநாசினி மூலமோ சுத்தம் செய்த பிறகே, அந்தக் கவசத்தை கையிலெடுக்க வேண்டும்.

* உங்கள் மூக்கையும், வாயையும் முகக் கவசம் முழுமையாக மூடும் வகையில் அணிய வேண்டும். முகத்துக்கும், முகக் கவசத்துக்கும் இடைவேளி இருக்கக் கூடாது.

* முகக் கவசம் அணிந்திருக்கும்போது, அதனை கைகளால் தொடுவதைத் தவிா்க்கவும். அப்படி தொட வேண்டியிருந்தால், அதற்கு முன்னா் கைகளை சோப்பு / கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யவும்.

* முகக் கவசங்களைக் கழற்றும்போது, அவற்றின் பின்பகுதியை மட்டுமே தொட்டுக் கழற்றவும். முன்பகுதியில் ஒரு போதும் கைவைக்க வேண்டாம்.

* ஒரு முறை பயன்படுத்தக் கூடிய முகக் கவசங்களைக் கழற்றிய பிறகு, அவற்றை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். மூடிய குப்பைத் தொட்டியில் அவற்றை பத்திரமாகப் போட்டுவிடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com