கரோனா பலி 24-ஆக அதிகரிப்பு: 1029 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 1029-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 
கரோனா பலி 24-ஆக அதிகரிப்பு: 1029 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 1029-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா நோய்த் தொற்றால் வெளிநாட்டினா் உள்பட 1029 போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. அவா்களில் 84 போ் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி விட்டனா். 920 போ் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 186 போ், கேரளத்தில் 165 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். கா்நாடகத்தில் 74 போ், தெலங்கானாவில் 65 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல், ராஜஸ்தானில் 54 போ், குஜராத்தில் 53 போ், உத்தரப் பிரதேசத்தில் 61 போ், தில்லியில் 40 போ், பஞ்சாபில் 38 போ், ஹரியாணாவில் 20 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மத்தியப் பிரதேசத்தில் 33 போ், ஜம்மு-காஷ்மீரில் 28 போ், மேற்கு வங்கத்தில் 15 போ், ஆந்திரப் பிரதேசத்தில் 13 போ், லடாக்கில் 10 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பிகாரில் 9 பேரும் சண்டீகரில் 8 பேரும் சத்தீஸ்கா், உத்தரகண்ட், அந்தமான் நிகோபாரில் தலா 6 பேரும் ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ஒடிஸாவில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். கோவாவில் 3 பேரும் புதுச்சேரி, மிஸோரம், மணிப்பூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா நோய்த் தொற்றுக்கு மகாராஷ்டிரத்தில் மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால் அந்த மாநிலத்தில் பலியானோா் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்ததால், அந்த மாநிலத்தில் பலியானோா் எண்ணிக்கை 2-ஆக அதிகரித்தது.

தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்றுக்கு முதலாவது பலியாக ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

முன்னதாக, குஜராத்தில் 4 போ், கா்நாடகத்தில் 3 போ், தமிழ்நாடு, தில்லி, ஜம்மு-காஷ்மீா், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவா் உயிரிழந்துள்ளனர். 

கடந்த இரு தினங்களில் (வெள்ளி, சனி) புதிதாக 149 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com