புதுவாயலில் ஊராட்சிக்கு உள்ளேயே ஊரடங்கு

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் ஊராட்சியில் ஊராட்சிக்கு உள்ளேயே தெருக்கள் தோறும் தடுப்புகள் அமைக்கப்பட்டு யாரும் நுழையக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
புதுவாயலில் ஊராட்சிக்கு உள்ளேயே ஊரடங்கு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் ஊராட்சியில் ஊராட்சிக்கு உள்ளேயே தெருக்கள் தோறும் தடுப்புகள் அமைக்கப்பட்டு யாரும் நுழையக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

புதுவாயல் ஊராட்சி மன்ற தலைவர் அற்புதராணி சதீஷ்குமார் மற்றும் இயற்கை விவசாயி சமூக ஆர்வலர் பிரபாகரன் இணைந்து புதுவாயல் ஊராட்சிக்குள் யாரும் வரக்கூடாது என்றும், ஊராட்சியில் ஒரு தெருவில் இருப்பவர்கள் அடுத்த தெருவிற்கு கடைக்கு செல்வதை தவிர்த்து வேறு எதற்கும் செல்ல கூடாது என வலியுறுத்தி கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதில் வேப்பிலை தோரணங்களை கட்டி வைத்தும், எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த செயல் மூலம் வெளி நபர்கள் வருவது தடுக்கப்படுவதோடு உள்ளூரிலேயே மக்கள் அவரவர் தெருக்களில் அவரவர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

மேலும் ஊராட்சியில் யாராவது தேவையில்லாமல் வெளியே சுற்றினால் அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என ஊராட்சி சார்பில்  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதே போல ஆரம்பாக்கம் பாரதி நகரில் 3தெருக்களில் சாலை மறிக்கப்பட்டு யாரும் உள்ளே நுழையாதீர் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com