தஞ்சாவூரில் மீண்டும் கரோனா தொற்று: போக்குவரத்தில் கெடுபிடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்தில் கெடுபிடி செய்யப்பட்டுள்ளது. 
தஞ்சாவூரில் மீண்டும் கரோனா தொற்று: போக்குவரத்தில் கெடுபிடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்தில் கெடுபிடி செய்யப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 55 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 38 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். எனவே, மாவட்டத்தில் ஏப். 24-ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு கரோனா தொற்று இல்லாததால் சிவப்பு மண்டலத்திலுள்ள இம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறும் என  எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே சனிக்கிழமை மாவட்டத்தில் போக்குவரத்தில் காவல்துறையினர் கெடுபிடி செய்து வருகின்றனர். 

குறிப்பாக, ஒரு பகுதியில் இருந்து  மற்றொரு பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, கொடி மரத்து மூலை, சிவகங்கை கங்கை பூங்கா  உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.  

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com