புதிய ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தின் செயல்பாட்டை அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கி வைத்தார்
By DIN | Published On : 06th May 2020 03:39 PM | Last Updated : 06th May 2020 03:39 PM | அ+அ அ- |

பென்னாகரம்: புதிய ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தின் செயல்பாட்டை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று துவக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம். பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஒன்றியத்தை முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பென்னாகரம் ஒன்றியத்திலிருந்து 10 ஊராட்சிகள் பிரித்து புதிய ஏரியூர் ஒன்றியதை அறிவித்தார்.
சுஞ்சல்நத்தம் ஊராட்சி ஏரியூர் கிராமத்தை தலைமை இடமாக கொண்டு கோடிஅள்ளி, அஜ்ஜன அள்ளி, சுஞ்சல்நத்தம், இராமகொண்டஅள்ளி, மஞ்சாரஅள்ளி, பத்ரஅள்ளி, கொண்டையனஅள்ளி, பெரும்பாலை, நாகமரை, தொண்ணகுட்டஅள்ளி உட்பட 10 ஊராட்சி மன்ற தலைவர்களையும், 12 ஒன்றிய கவுன்சிலர்களையும் கொண்ட ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்து புதிய ஒன்றிய சேர்மன் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை புதன்கிழமை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.மலர்விழி, மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, தர்மபுரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பெருந்தலைவர் டி.ஆர். அன்பழகன், ஒன்றிய சேர்மன் பழனிசாமி, ஒன்றிய துணைச் சேர்மன் தனபாலன், பென்னாகரம் ஒன்றிய சேர்மன் கவிதா ராமகிருஷ்ணன், துணைச் சேர்மன் அற்புதம் அன்பு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, கல்பனா, நீலமேகம், சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் சி.வி.மாது, குட்டி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.