திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நின்ற குடிப்பிரியர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நின்ற குடிப்பிரியர்கள்


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழங்கில் சில கட்டுப்பாடுகள் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கடந்த மே 7 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் இதில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாகக் கூறி பொதுமுடக்கம் முடியும் வரையில் டாஸ்மாக் கடைகளுக்குத் தடை விதித்து மே 8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 238 கடைகளில் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள 5 கடைகளைத் தவிர மீதம் உள்ள 233 கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.
எனினும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளின் முன்பாக குறைந்த அளவே கூட்டம் காணப்பட்டது. மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர். அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பாகவும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com