ஊத்தங்கரை திமுக சார்பில் நலத்திட்ட உதவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், ஏழை, எளிய மக்களுக்கு திமுக
மிட்டப்பள்ளி ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள், ஏழை மக்களுக்கு நல உதவிகளை வழங்குகிறார் மாவட்ட பொருப்பாளர் செங்குட்டுவன்.
மிட்டப்பள்ளி ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள், ஏழை மக்களுக்கு நல உதவிகளை வழங்குகிறார் மாவட்ட பொருப்பாளர் செங்குட்டுவன்.


ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், ஏழை, எளிய மக்களுக்கு திமுக சார்பில் அரிசி, பருப்பு ,காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார், ஒன்றிய கழக செயலாளர்கள் எக்கூர் செல்வம், சாமிநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலர் குமரேசன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே. கந்தசாமி , நகர செயலாளர் பாபு சிவக்குமார், முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் நரசிம்மன், மிட்டப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய் கமலநாதன், சிறுபாண்மை பிரிவு அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட மாவட்ட பொருப்பாளர் செங்குட்டுவன்100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வழங்கினார், இதில் ஊராட்சிமன்ற துணை தலைவர் வென்னிலா, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் சின்னதம்பி, குப்புசாமி, ஊராட்சி செயலாளர் இளங்கோவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி, மூன்றம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், வார்டுஉறுப்பினர்கள் வேலு, மாதேஷ்வரன், சக்தி, தங்கதுரை, பொறியாளர் அணி காந்தி, பெருமாள்,அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளரும் மிட்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய், மற்றும் ஊத்தங்கரை லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் நிர்மலா கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com