நடுக்கடலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மாயம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள யூரியா ஏற்றி வந்துள்ள கப்பலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மற்றும்
நடுக்கடலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மாயம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள யூரியா ஏற்றி வந்துள்ள கப்பலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாலுமி மற்றும் சிப்பந்திகள் 15 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 7 பேரும் பணியில் இருந்தனர் 

எகிப்து நாட்டின் அல் அடபியா துறைமுகத்தில் இருந்து யூரியா ஏற்றி வந்த சரக்கு கப்பலில் (கிரேவிட்டி/0109) மாலுமி உட்பட 22 பேர் உள்ளனர்

இந்த கப்பலில் வந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த கப்பல் மாலுமி ஆண்ட்ரி ஸ்டாரோஸ்டின் என்பவர் கடந்த 15-05-2020 அன்று இரவு நேரம் நடுக்கடலில் காணாமல் போனதாக தகவல்

இந்த கப்பல் தூத்துக்குடி துறைமுக சரக்கு தளத்திற்கு  வரும் 22-05-20 அன்று நிறுத்தப்படும் போது முறையாக தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் கப்பலின் மாலுமி அளிக்கும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளபடும் என தெரிகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com