போடி அருகே நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் 55 வயதானவர்களுக்கு பணி வழங்கக் கோரி முற்றுகை போராட்டம்

போடி அருகே நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் 55 வயது நிறைவடைந்தவர்களுக்கும் பணி வழங்கக் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போடி அருகே நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் 55 வயதானவர்களுக்கு பணி வழங்கக் கோரி முற்றுகை போராட்டம்


போடி: போடி அருகே நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் 55 வயது நிறைவடைந்தவர்களுக்கும் பணி வழங்கக் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 கிராமங்களில் வேலை உறுதி திட்டத்தின் நூறு நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நூறு நாள் வேலைத் திட்ட பயனாளிகளில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்காலிகமாக பணி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொற்று  பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறி 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு பணி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போடி அருகே சிலமலை ஊராட்சியில் நூறு நாள் திட்டத்தின் கீழ் 55 வயது நிறைவடைந்தவர்களுக்கும் பணி வழங்கக் கோரி பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 55 வயது நிறைவடைந்தவர்கள் வேலை இல்லாததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முக கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடித்து வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், சாந்தி, போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் 55 வயது நிறைவடைந்தவர்களுக்கு நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், நிவாரண உதவிகள் கிடைக்க பரிந்துரை செய்வதாகவும் கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஒரு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com