உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்:  சக்திகாந்த தாஸ்

உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும். உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்:  சக்திகாந்த தாஸ்


உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும். உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காவது முறையாக பொது ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

கரோனா தாக்கத்தால்  உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. வளர்ந்த நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி 14% வரை குறைந்துள்ளதாகவும், மத்திய அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும். ஜிடி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல் இந்த நிதியாண்டில் இல்லை. தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவீதமாக குறைந்துள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம்.

மேலும் இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி, மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளது என்று சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com