கூத்தாநல்லூர் அடுத்த அத்திக்கடை ஜமாஅத் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல் 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த அத்திக்கடை ஜமாஅத் சார்பில்,ரூ.15 லட்சம் மதிப்பீட்டில், அத்தியாவசியப் பொருட்களை வெள்ளிக்கிழமை வழங்கினர்.
கூத்தாநல்லூர் அடுத்த அத்திக்கடை ஜமாஅத் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல் 

கூத்தாநல்லூர்:  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த அத்திக்கடை ஜமாஅத் சார்பில்,ரூ.15 லட்சம் மதிப்பீட்டில், அத்தியாவசியப் பொருட்களை வெள்ளிக்கிழமை வழங்கினர்.

கரோனா தொற்று நோய் ஊரடங்கு காரணமாகவும், ரமலான் நோன்பு மாதத்தை முன்னிட்டும், ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, அத்திக்கடை,ஆல் அரபா மஹாலில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு அத்திக்கடை ஜமாஅத் தலைவர் வி.எஸ்.ஏ.அஷ்ரப் அலி தலைமை வகித்தார். வட்டாட்சியர் தெய்வநாயகி, கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில் ஜமாஅத் செயலாளர் ஜே.எம்.ஏ. ஷேக் அப்துல் காதர், பொதக்குடி ஜமாஅத் தலைவர் எஸ்.ஏ.மகதூம் மைதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூத்தாநல்லூர் ஜமாஅத் துணைச் செயலாளர் எல்.பி. முகம்மது மைதீன் வரவேற்றார். 

நிகழ்ச்சியில், ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்கள் என அனைத்து சமூகத்தினர் உள்ளிட்ட 600 பேருக்கு, ரூ.15 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கிஷோர், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினர். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் கலைவாணன் பேசியது. அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ரமலான் மாதத்தில் 4 வது முறையாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது. ஆனால், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக தொற்று பரவி விடாமல் இருக்க, அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசங்கள் அணிந்து பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்றார். 

நிகழ்ச்சியில், பொதக்குடி ஜமாஅத் செயலாளர் ரஃப்யுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இதுகுறித்து, அத்திக்கடை ஜமாஅத் தலைவர் வி.எஸ்.ஏ.அஷ்ரப் அலி கூறியது. இன்று மட்டும் ஏழை ,எளிய அனைத்து சமூகத்தினர் 600 பேருக்கு, அரிசி, மளிகைப் பொருட்கள், புடவை, கைலி, பால் உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. நான் உனக்கு வேண்டிய வசதிகள் அனைத்தையும் கொடுத்துள்ளேன். ஏழை, எளியவர்களுக்கு நீ என்ன தர்மம் செய்துள்ளாய் என ஒவ்வொரு இஸ்லாமியர்களிடத்திலும் அல்லாஹ் கேட்பார். அல்லாஹ் அது போன்ற ஒரு கேள்வியைக் கேட்டு விடக் கூடாது என்பதற்காகவும், ஏழை, எளியவர்களுக்கும், சாதி,மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து சமூகத்தினருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். நிறைவாக, அத்திக்கடை ஜமாஅத் செயலாளர் ஜெகபர் தீன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com