சிறுதொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: சக்திகாந்த தாஸ்

சிறுதொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. மேலும் 3 மாதங்களுக்கு சிறுதொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார். 
சிறுதொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: சக்திகாந்த தாஸ்


சிறுதொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. மேலும் 3 மாதங்களுக்கு சிறுதொழில்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார். 

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காவது முறையாக பொது ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து 5 கட்டமாக பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். 

இதைத்தொடர்ந்து  ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழை வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன என்றும் இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைக்கு மேற்கொள்ளும். இந்தியாவின் 60% உற்பத்தித் துறை கரனோ பாதித்த சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது.

சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி குறைந்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வழங்கப்படும். 

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப் பிரச்னைகளை சரி செய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுபத்தவும் ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பற்றாக்குறையை சரிசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மேலும் வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது. மானாவரி சாகுபடியின் பரப்பளவு 44 சதவீதம் உயர்ந்துள்ளது. 

வீடு, வாகனக் கடன்கள் மீதா ன வட்டி குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, வங்கிக் கடன் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதுபோல, கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com