அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 16,66,828; பலி 98,683 ஆக உயர்வு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் பாதித்தோரின் எண்ணிக்கை 16,66,828 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 98,683 ஆக அதிகரித்துள்ளது. 
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 16,66,828; பலி 98,683 ஆக உயர்வு


நியூயார்க்: உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் பாதித்தோரின் எண்ணிக்கை 16,66,828 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 98,683 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை  54,04,382 ஆக உயர்ந்துள்ளது, 22,47,234 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,43,975 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், வல்லரசு நாடான அமெரிக்காவில் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக நாடுகள் கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவை ஆட்டிப் படைக்கிறது கரோனா. அங்கு இதுவரை 16,66,828 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  98,683 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர், 4,46,914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com