அமைச்சர் காமராஜ் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறாரா? - திமுக எம்எல்ஏக்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேர் பொதுமக்களிடம் பெறப்பட்ட 10 ஆயிரம் மனுக்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகரனிடம் வெள்ளிக்கிழமை அளித்தனர். 
அமைச்சர் காமராஜ் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறாரா? - திமுக எம்எல்ஏக்கள்


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேர் பொதுமக்களிடம் பெறப்பட்ட 10 ஆயிரம் மனுக்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகரனிடம் வெள்ளிக்கிழமை அளித்தனர். 

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் "ஒன்றிணைவோம் வா" என்கிற இணையதளத்தின் மூலம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களுக்கு உதவி செய்திடவும் மனுக்களை அரசிடம் வழங்கியும் வருகிறோம்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 4 திமுக சட்டப் பேரவை உறுப்பினர்களிடம் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை(2-ஆம் கட்டம்) மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம்  சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், தளி பிரகாஷ், வேப்பன அள்ளி முருகன், ஓசூர் சத்யா ஆகிய 4 பேர் நேரில் பத்தாயிரம் மனுக்களை நேரில் வழங்கினர் 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தது: கடந்த 12ஆம் தேதி முதல் கட்டமாக 2,186 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினோம் தற்போது 10 ஆயிரம் மனுக்கள் வழங்கியுள்ளோம். இந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அதற்கு நேர் மாறாக தமிழக அரசு எதிர்வினை ஆற்றி வருகிறது. திமுக அரசியல் செய்வதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டுகிறார். பொதுமக்கள் யாரிமும் மனுக்கள் வழங்கவில்லை உணவுப் பொருட்கள் கோரவில்லை என பேசி வருகிறார். 

மேலும், கூட்டுறவுத் துறை மூலம் நியாயவிலை கடைகளுக்கு படிவம் அனுப்பப்பட்டு அதில் பொதுமக்கள் நீங்கள் அரசின் உணவுப்பொருட்கள் வாங்கி விட்டீர்களா? வேறு யாரிடமாவது உதவி கோரி உள்ளீர்களா? மனு அளித்தீர்களா? உங்களை கட்டாயப்படுத்தி மனு வாங்கினார்களா? என கேள்வி எழுப்பி கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி வருகின்றனர். இதிலிருந்து தெரிகிறது திமுக அரசியல் செய்யவில்லை அதிமுக தான் அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டினார். உணவுத் துறை அமைச்சரின் இந்த செயல் மனவேதனை அளிக்கிறது என தெரிவித்தனர். 

உணவுத்துறை அமைச்சர் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறாரா? அல்லது தனித்து செயல்படுகிறாரா? என தெரியவில்லை என கூறினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com