தில்லி சந்தைகளில் குவியும் மக்கள்: கரோனா பரவல் அபாயம்
By ANI | Published On : 09th November 2020 07:52 PM | Last Updated : 09th November 2020 07:52 PM | அ+அ அ- |

தில்லி சரோஜினி மார்க்கெட்
தில்லியில் கரோனா பரவல் 3ம் அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகைக்காக பொருள்கள் வாங்குவதற்கு, மக்கள் சந்தைகளில் குவிந்து வருவதால் தொற்றின் பரவல் தீவிரமடையும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா பரவலின் 3ம் அலை ஆரம்பித்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்குவதற்காக தில்லியின் முக்கிய சந்தைகளான சதர் பஜார் மற்றும் சரோஜினி நகர் மார்க்கெட்டில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் வந்து செல்கின்றனர்.
வரும் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் கடந்த சில நாள்களாகவே ஆயிரக்கணக்கான மக்கள் பொருள்கள் வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர்.
இதனால் தில்லியில் கரோனா பரவல் தீவிரமடையும் அச்சம் ஏற்பட்டுள்ளது.