மகாராஷ்டிரத்தில் 24 மணிநேரத்திற்குள் 3 நிலநடுக்கம்
By ANI | Published On : 05th September 2020 11:40 AM | Last Updated : 05th September 2020 11:40 AM | அ+அ அ- |

மகாராஷ்டிரத்தில் 24 மணிநேரத்திற்குள் 3 நிலநடுக்கம் (கோப்புப்படம்)
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை காலை 2.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தின் மும்பை நகரத்தின் 98 கி.மீ வடக்கே சனிக்கிழமை காலை 6.36 மணியளவில் 2.8 ரிக்டர் அளவு நில அதிர்வு உணரப்பட்டது.
பூமிக்கடியில் சுமார் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறினர்.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவை தாக்கிய மூன்றாவது நில அதிர்வு இதுவாகும்.
இதற்கு முன் வெள்ளிக்கிழமை காலை 10:33 மணியளவில் மும்பை நகரத்தின் 91 கி.மீ வடக்கே 2.8 ரிக்டர் அளவு நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் நேற்று இரவு 11:41 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நில அதிர்வு மகாராஷ்டிராவின் நாசிக்கிற்கு மேற்கே 98 கிலோ மீட்டரில் உணரப்பட்டது.
இந்த நில அதிர்வால் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.