ஓமனின் அரசுப் பணியில் அதிகளவு இந்தியர்கள்
By DIN | Published On : 05th September 2020 03:36 PM | Last Updated : 05th September 2020 03:36 PM | அ+அ அ- |

ஓமனின் அரசுப் பணியில் அதிகளவு இந்தியர்கள்
ஓமன் நாட்டு பொதுப் பணித்துறையில் உள்ள வெளிநாட்டினர்களில் அதிகளவு இந்தியர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானின் மாநில புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல் தேசிய மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஓமன் அரசாங்கப் பணியில் உள்ள 2,29,386 பேரில் 34,000 பேர் வெளிநாட்டினர்கள் உள்ளனர்.
அதில், அதிகபட்சமாக 12,453 இந்தியர்கள், 9,631 எகிப்தியர்கள், 1,325 பாகிஸ்தானியர்கள் ஆகிய நாட்டினர்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.
ஓமானின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் வெளிநாட்டினர்கள் உள்ளனர். அவர்களில் குறைந்தது 8 லட்சம் இந்திய தொழிலாளர்கள் மற்றும் 2.5 லட்ச பாகிஸ்தானியர்கள் உள்ளனர்.