வத்திராயிருப்பு அருகே அடிப்படை வசதி வேண்டி மக்கள் நூதன போராட்டம்
By DIN | Published On : 07th September 2020 06:52 PM | Last Updated : 07th September 2020 06:52 PM | அ+அ அ- |

தேசியக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு அருகே அடிப்படை வசதிகளுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டி கிராம மக்கள் கையில் தேசியக் கொடி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி ஊராட்சியில் சாலையில் இருபுறமும் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்.
ஆக்கிரமிப்பால் கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டு நடைபாதையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், ஆக்கிரமிப்பால் 17 வருடங்களாக தம்பிபட்டி கண்மாயில் நீர் வரத்து இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது என பலமுறை கிராம மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, தம்பிபட்டி கிராம மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி தேசியக் கொடியை கையில் ஏந்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் வட்டார தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். கிராம கமிட்டி தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். இலக்கிய அணி மாவட்ட தலைவர் சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் தம்பி பெட்டி ஊர் நாட்டாமைகள் வீரபுத்திரன் கோவிந்தராசு மற்றும் கல்யாணசுந்தரம் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்